News
JULY 2025

குரு உபதேசம் 4450
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
இக்காலத்தில் சாட்சிகள் இல்லாமல் குற்றம் செய்தவர்களும் பணபலம், ஆள்பலம், புகழ், அதிகாரம், பதவி, சிபாரிசு போன்றவைகளின் உதவியினால் நீதியின் பிடிக்கு அகப்படாமல் மனித அளவில் உள்ள சட்டங்களிலிருந்து வேண்டுமானால் தப்பித்து விடலாம். ஆனால் இறைவனின் தீர்ப்பிற்கு முன் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என்பதையும், வருங்காலம் ஞானசித்தர் காலமதனாலே ஞானசித்தர் யுகத்தின், ஞானசித்தர் ஆட்சியின் தலைவன் முருகப்பெருமான் என்பதினாலே அவனது ஆட்சியிலே இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, உலகின் பலகோடி இடங்களில் நடப்பவைகளை ஒரே நேரத்தில் காணும் சக்தி பெற்றவன் முருகன் என்பதினாலே, எவர் எங்கு என்ன தவறு செய்தாலும், அவர்க்கு அந்த இடத்திலேயே உடனுக்குடன் நீதிபரிபாலனம் செய்யவல்லவன் முருகப்பெருமான். தவறு செய்தவன் எவ்வளவு சக்தியுடையவனாயினும் சரி, எவ்வளவு பெரிய ஆளாயினும் சரி, ஏன் பெரும் அதிகாரத்தையும், ஆள்படையும், பணபலமும் ஒருங்கேபெற்ற பேரரசனாயினும் சரி, முருகனது நீதிக்குமுன் அவன் செய்த குற்றத்திற்குரிய தண்டனையை உறுதியாக பெறுவான் என்பதை தெளிவாக அறியலாம்.
