News
JULY 2025

குரு உபதேசம் 4452
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
முதுபெரும் ஞானத்தலைவன் முருகனை உளமார அனைவரும் வணங்க வணங்க இவ்வுலகமும் நாடும், முருகனது கருணைக்கு ஆளாகி, இவ்வுலகினில் மனிதர்கள் ஆட்சி முடிந்து ஞானிகள் ஆட்சி அமையும் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் தலைமையேற்று நடக்கவிருக்கும் ஞானசித்தர்கள் ஆட்சியிலே அளவான வரிவிதிப்பும், மக்களின் தகுதிக்கேற்ப வரிவிதிப்பும், சூழ்நிலைக்கேற்ப வரிவிதிப்பும் கடைப்பிடிக்கப்பட்டு மனிதாபிமானத்திற்கே முதலிடம் என்பதையும், லஞ்சலாவண்யங்கள் கடுமையாக ஒடுக்கப்படும் என்பதையும், கலப்படம் செய்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
