News
JULY 2025

குரு உபதேசம் 4470
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
முருகனை வணங்க வணங்க, எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி இரங்கி இதம் புரிகின்ற ஜீவதயவை வரமாய் பெறுவார்கள். ஜீவதயவு பெருக பெருக, மும்மலக்கசடால் ஆன இந்த தேகமே பேரின்பத்திற்கு காரணமாக அமைகிறதையும் அறியச்செய்து அறியாமையையும், பலகீனங்களையும் உண்டாக்குகின்ற மும்மலதேகத்தின் தன்மையை உணரச்செய்கிறான். தேகம் மரணமிலாப் பெருவாழ்வை பெறத் தடையாக இருப்பது மும்மலமே என்றும், நமது தேகமே மும்மலக் குற்றத்தால் அறியாமை உண்டுபண்ணுகிறது என்பதையும் அறியச்செய்து மும்மலக் கசடை நீக்கி தூய தேகம் வெளிப்பட இறுதியில் அவனே மும்மல கசடாலான மனிததேகத்தை சார்ந்து மும்மல கசடை நீக்கி தூய ஒளிதேகம்தனை அடைய அருளுகின்றான் முருகப்பெருமான் என்பதையும் அறியலாம்.
