News
AUGUST 2025

குரு உபதேசம் 4487
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்….
வரவிருக்கும் இயற்கை பேரழிவை, பிரளயத்தை தடுப்பதற்காக ஏற்படவிருக்கும் ஞானபண்டிதன் தலைமையினால் ஆன ஞானசித்தர் ஆட்சியிலே உயிர்க்கொலை செய்து புலால் உண்கிற உயிர்பலி பாவம் கொண்டோருக்கும், மது அருந்தி மதிமயங்கியவர்களுக்கும், பொருள்பற்று கொண்டவர்களுக்கும், வன்மனம் கொண்டோருக்கும், பழிவாங்கும் உணர்வு உடையவர்க்கும், மக்களிடையே பேதாபேதம் பார்த்து நீதி தவறுகிறவர்களும் ஆட்சிபொறுப்பிலே வாய்ப்பே இல்லை என்பதையும் முருகனது ஆட்சி முழுமையான ஆட்சி, ஜீவதயவுடைய ஆட்சி, பண்புள்ள ஆட்சி, மென்மையானதும் வலிமையானதுமான நீதிநெறி ஆட்சி, தர்மத்தின் ஆட்சி அதில் ஏழை எளியோர், பஞ்சபராரிகள், முதியோர், பத்தினி பெண்டிர், பக்தர்கள், பெண்கள் என அனைவரும் பாதுகாப்பாக வாழலாம்.
நல்லோர் நலமுடன் வாழ்வோர்,தீயோர் திருந்த வாய்ப்பளிக்கப்பட்டு திருத்தப்படுவார்கள் என்பதையும் ஒரே குளத்தில் ஆடும், பசுவும், புலியும், சிங்கமும், முதலையும் என எல்லா ஜீவராசிகளும் பேதமின்றி நீர் அருந்தி வாழும் ஒரு அமைதியான வளமான வாழ்வை உடைய தூய நெறிப்பட்ட ஆட்சியாக இருக்கும். அது சொர்க்கத்தின் ஆட்சியாக இருக்கும் என்பதையும் அறியலாம்.
முருகனது ஆட்சி மலர முருகப்பெருமானை அழையுங்கள், ஞான ஆட்சி அமைய ஞானியர் திருவடி பற்றுங்கள். ஜீவதயவு ஆட்சி மலர ஜீவதயவை பெருக்கிட பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவியுங்கள். இவையெல்லாம் செய்ய செய்ய விரைந்தோடி வந்து ஆட்சி அமைப்பான் முருகப்பெருமான் அன்பர் வேண்டுகோளுக்கு இணங்க.
ஓம் சரவணஜோதியே நமோ நம!
