News
AUGUST 2025

குரு உபதேசம் 4489
முருகப்பெருமான் திருவடிகளை வணங்கிபூஜித்து ஆசிபெற்றிட்டால்….
மன்னவன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பது ஆன்றோர் வாக்கு. மக்களை வழிநடத்தி பாவியாகாது காத்து தருமத்தின் வழி மக்களை வழிநடத்தி சென்று நாடு செழிக்க, மக்கள் நலமுடன் வாழ, தன்னலமற்று தொண்டாய் தாம் ஏற்ற பதவியை பயன்படுத்தி ஆட்சி செய்ய வேண்டியவர்களில் சிலர் தடம் மாறி உயிர்க்கொலை செய்து புலால் உண்பவர்களாகவும், மது அருந்தி அறிவு மயக்கத்திற்கு உள்ளானவர்களாகவும், தர்மத்தின் வழி செல்லாது அதர்மம் புரிபவர்களாகவும், பதவியில் அமர்ந்து நாட்டினில் பாவச்சுமை ஏற்பட காரணமாக அமைந்து விட்டதால் நாடும் நாட்டுமக்களும் பல துன்பத்தினை சந்திக்க நேர்ந்தது என்பதை அறியலாம்.
மனிதர் ஆட்சி முடிந்து ஞானிகள் ஆட்சி இனி வருகின்றதினாலே இனி நாடும் வீடும் செழிக்கும் என்றும் ஞானஆட்சி அமைய ஞானத்தலைவனை அனைவரும் ஆட்சி அமைக்க “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவணபவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ உளமார மனமுருகி நாட்டை காத்திட முருகப்பெருமானை அழைத்தால், நாட்டு மக்கள் எந்த அளவிற்கு முருகப்பெருமான் நாமங்களை கூவி அழைக்கின்றார்களோ அந்த அளவிற்கு ஞானத்தலைவன் முருகப்பெருமான் விரைந்து வெளிப்பட்டு மனிதர்கள் ஆட்சி முடித்து ஞானத்தலைவன் தலைமையில் இவ்வுலகினில் ஞானிகள் ஆட்சியை ஏற்படுத்தி இயற்கையின் முரண்பாடுகளை சமன் செய்து பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தி மக்களை காத்து ரட்சித்து சொர்க்க லோகம் போன்ற நல்லாட்சியை ஏற்படுத்துவான் என்பதையும் அறியலாம்.
குடும்பத்தலைவன் பண்பு குடி செழிக்கும்
நாட்டின்தலைவன் பண்பு நாடு செழிக்கும்.
