News
AUGUST 2025

குரு உபதேசம் 4493
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
அரசினை வழிநடத்தி மக்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல்வாதிகள் அரசியலின் பெயரால் மக்களுடைய சொத்தான பொதுச்சொத்துக்களையும் அபகரிப்பதோடு பொதுமக்கள் பணத்தினை ஏராளமாய் தனக்காக சேகரித்து வைத்துள்ளார்கள். இனி வரும் காலத்தில் ஞானசித்தர் காலத்திலே அவர்கள் நீதிக்கு புறம்பாக சேர்த்த அத்துணை சொத்தும், கடவுளின் பெயரால் மீண்டும் பெறப்பட்டு நாட்டு மக்களுக்கு சென்றடையும் என்பதை அறியலாம்.