News
SEPTEMBER 2025

குரு உபதேசம் 4508
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
அகத்தீசனை வணங்கி பூஜிக்க பூஜிக்க ஞானத்தினை அடைதலின் படிகள், நான்கென்றும் அவை அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதும், அதுவே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன என்றும் நற்பண்புகளை அறிவதும் ஞானிகள் துணையால் நற்பண்புகளை பெற்று நன்னடத்தை உடையோராய் வாழ்தல் சரியை என்பதும், கடவுள் உண்டென்று நம்புவதும் கடவுளை பூஜித்து கடவுளின் ஆசியை பெற்று கொள்வதும் கிரியை என்பதும், மூச்சுக்காற்றைப் பற்றி அறிதலும், அதை வயப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து பயற்சி செய்வதும் யோகம் எனவும், அருட்பெருஞ்ஜோதி வடிவினனான முதல் ஜோதி வடிவாகிய முழுமுதற் கடவுள் முருகப்பெருமானின் முழுமையான ஆசியை பெறுவதும், ஆசி பெற்று அருள் நிறை முருகனருளால் ஜோதி வடிவமாக மாறுவதும் ஞானம் என்பதாகும் என்பதை அறிந்து கொள்ளலாம். அறிந்து அகத்தீசன் ஆசியால் படிப்படியாக நான்கு படிகளையும், அகத்தீசன் துணையால் சென்று வெல்லலாம் என்பதையும் அறியலாம். ஞானமடைய வேண்டுமாயின் முருகனது ஆசியை முழுமையாக பெற்றாலன்றி முடியாது என்பதையும் அறியலாம்.