News
SEPTEMBER 2025

குரு உபதேசம் 4509
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
முருகனது ஆசியைப் பெற முருகனது திருவடிப் பற்றி பூஜித்தல் அவசியம் என்பதும், வெறும் பூஜையால் வரும் தவபலத்தால் மட்டும் ஞானத்துறையில் முன்னேற முடியாது என்பதும், முருகனை பூஜித்து ஆசி பெற்றதால் வந்த பூஜை பலத்தின் உதவியால் புண்ணியங்களை செய்ய முருகனது அருளைப் பெற வேண்டும்.
முருகனது அருளைப் பெற வேண்டுமாயின் அவன் ஜீவ தயவு உடையோராய் இருத்தல் அவசியம் ஆகிறது. ஜீவதயவை பெற வேண்டுமாயின் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு தினம் தினம் தவறாது முருகனை பூஜிக்க வேண்டும்.
உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவ உணவை மேற்கொண்டு பூஜை செய்ய செய்ய பரோபகாரம் பெருகி உலக உயிர்களும் தம்மைப் போலத்தான் என்பதை அறியும் அறிவை பெறலாம். உலக உயிர்கள் படும் துன்பம் கண்டு இரங்கி உலக உயிர்களுக்கு குறிப்பாக மேம்பட்ட பிறப்பாகிய மனிதர்களுக்கு உண்டான பசியை போக்க முயற்சிப்பதை முதல் கடமையாக கொள்ள வேண்டும்.
ஆதலின் மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிப்பதை கடமையாகக் கொண்டு பசியாற்றுதலாகிய மிக உயர்ந்த பரோபகார செயலை செய்திடல் அவசியமாகும் என்பதை உணரலாம்.
……………
கடந்தான் கந்தனின் கழலிணை போற்றிட
கடக்கத் துணையாம் கந்தனின் கழலே.
செவ்வையாம் இவ்வுலகை செவ்வேலன் ஆண்டிட
ஒளவையும் மகிழ அகிலம் செழிக்குமே.
