News
SEPTEMBER 2025

குரு உபதேசம் 4510
அகத்தீசனை பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
அகத்தீசனை வணங்கி பூஜிக்க பூஜிக்க சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு படிநிலைகளை அடைவது அவசியம் என்பதும், இந்த நான்கு படிநிலைகளையும் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்காய், மகான் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மகான் திருமூலர் இயற்றிய திருமந்திரம் போன்ற ஞானநூல்களை பயபக்தியுடன் வணங்கி படித்தால் அறிந்து கொள்ளலாம் என்பதையும், ஆனால் அதைவிட எளிமையான வழி எதுவெனில் எந்த ஞானி இந்த நூலை எழுதினார்களோ அவர்களது சூட்சுமங்களை படித்து அறிய முடியாது என்பதனால் அந்த நூலை இயற்றிய ஞானிகளது திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றால்தான் அவர்கள் கூறும் அருள் விளக்கங்கள் புரியும் என்பதை அறியலாம்.
