News
SEPTEMBER 2025

குரு உபதேசம் 4512
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
அகத்தீசனை வணங்க வணங்க ஞானநூல்களை படிக்க வேண்டுமென ஆர்வம் உண்டாகும். மகான் திருவள்ளுவர், திருக்குறள், மகான் திருமூலர், திருமந்திரம், மகான் மாணிக்கவாசகரின் திருவாசகம், மகான் ராமலிங்க சுவாமிகளின், அருட்பா போன்றவற்றை படிக்கப் படிக்க நூல்கள் கற்பதைவிட நூல்களை இயற்றிய ஞானிகள் திருவடிகளை பற்றினால்தான் நூல்களின் சாரம் புரியும் என்பதும், ஞானிகள் திருவடிகளை வணங்க வணங்க நம்முள் பக்தி தோன்றுவதையும் உணரலாம். பக்தியே முக்திக்கு மூலவித்தாய் இருப்பதையும் அறியலாம்.
