News
SEPTEMBER 2025

குரு உபதேசம் 4514
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
அகத்தீசனை வணங்க வணங்க பக்தி செலுத்தும் முறை தெரிந்து கொண்டு ஞான நூல்களை படித்து ஞான நூல்கள் அருளிய ஞானிகள் திருவடிகளை பூஜித்து ஆசி பெற பெற, ஞான நூல் ரகசியங்கள் புலப்படும். ஞான நூல்களில் கூறப்பட்ட ரகசியம் புரிய வேண்டுமெனில் அகத்தீசன் தயவு வேண்டுமென்பதும், அகத்தீசனே ஞானத்திற்கான வழிமுறை கூறும் தலைவன் என்பதும் அகத்தீசனே முருகப்பெருமானிடத்து நம்மைக் கொண்டு செல்பவர் என்பதும் முருகனே யோக ஞானம் போதிக்கும் ஆதிஞான மூல குரு என்பதும் தெளிவாக விளங்கும்.