News
SEPTEMBER 2025

குரு உபதேசம் 4516
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
அகத்தீசனை மனம் உருகி பூஜிக்க பூஜிக்க ஞான நூல் போன்றவை கற்று கடவுள் நம்பிக்கை உண்டாகி முதலில் தர்மம் செய்தால்தான் எல்லாம் சாத்தியம் என்பதை உள்ளுணர்வால் உணர்ந்து கொள்வார்கள். தர்மம் செய்து செய்து தர்மத்தின் மீது நம்பிக்கையும் தர்மம் செய்ய செய்ய இறைவனது உண்மை நிலையை உணர்த்துவார். அகத்தீசன் தயவே வடிவானவன், இறைவன் என்பதும் அவனே, எல்லா ஜீவர்களிடத்தும் நிறைந்துள்ளதையும் உணர்த்துவார். அகத்தீசன் ஜீவர்களுக்கு செய்யும் உபகாரமே இறைவனுக்கு செய்யும் உபகாரமாய் உணர்ந்து தர்மமும் பக்தியும் செய்து தர்மத்தின் மீதும், பக்தியின் மீதும் நம்பிக்கை உண்டாகும். தர்மமும் பக்தியும் செய்திட செய்திட, யோகம் புலப்படும். யோகம் கற்று கடைத்தேறினால்தான் ஞானமடைதல் தெளிவடைந்து ஞானம் பெறலாம் என்பதையும் அறிந்து கொள்வார்கள்.
