News
NOVEMBER 2025
குரு உபதேசம் 4584
முருகனை பூஜித்து ஆசிபெற்றிட:
உயிர்களிடத்து செலுத்துகின்ற அன்பே பக்தியாக மாறும். அந்த பக்தியே இறைவனிடத்து ஆசிபெற உறுதுணையாய் வரும் என்பதையும் அறியலாம்.
மாசற்ற மணிவாசகன் திருவடியை
ஆசற்றார் போற்றியே அகம் மகிழ்வர்.
கனிவுடைய மணிவாசகன் கழலிணை போற்றிட
பணிவான வாழ்வும் பண்பும் உண்டாம்.
வாட்டமற்ற மணிவாசகன் வழங்கிய வாசகத்தை
நாட்டமுற்று படித்திட நலமாம் சித்தியே
கல்லும் கனியும் கனிவான வாசகத்தை
அல்லும் பகலும் அருளாளரே போற்றுவர்.


