News
DECEMBER 2025
குரு உபதேசம் 4601
அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட்டால்….
கடவுள் நம்பிக்கையும், பாவபுண்ணியங்களில் நம்பிக்கையும் கொண்டு தலைவனை வணங்கி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொண்டவர்களான முற்றுப்பெற்ற ஞானிகளான திருக்கூட்ட மரபினில் வந்துதித்த உண்மை ஞானம் போதிக்கின்ற உண்மையான ஆன்மீகவாதிகளை உடைய நாடு எல்லா வளங்களையும் பெற்று செழித்து வளரும்.
உண்மை ஆன்மீகவாதிகளால் அரசு செம்மையாக நடந்து நல்லோர், பண்புடையோர், பத்தினி பெண்டிர், முதியோர் என அனைத்து தரப்பினரும் பாதுகாப்பான, வாழ்வை வளமோடு வாழ்வார்கள், நல்லாட்சி நடக்கும்.
போலி ஆன்மீகவாதிகள் பெருக பெருக போலி ஆன்மீகவாதிகளின் பாவத்தினாலே நாட்டினில் கடுமையான வறட்சி, மிகுதி மழை, புயல், வெள்ளம், சூறாவளி, நிலநடுக்கம், பூகம்பம், எரிமலை சீற்றங்கள், கடல் சீற்றங்கள், பெருந்தீ என இயற்கையின் எல்லா சீற்றங்களுக்கும் அந்நாடு உள்ளாகி கடுமையான பஞ்சத்தால் பீடிக்கப்பட்டு மிக மோசமான நிலையை அடையும் என்பதையும் அறியலாம்.


