தினம் ஒரு அகவல் 07
7. ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்
ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளி தரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி !
தவத்திற்கான ஊக்கத்தையும், உண்மையான ஆன்ம உணர்ச்சியையும் கொடுத்து நிலையான ஒளி தேகத்தை தர வல்லவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.