News
JANUARY 2026
16th January 2026
தினம் ஒரு அகவல் 08
8. எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
எல்லை இல் பிறப்பு எனும் இருங்கடல் கடத்தி என்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி !
எல்லையே இல்லாத பிறவிகள் என்னும் இருண்ட மாபெரும் கடலை நான் கடந்து செல்ல என்னுடைய துன்பங்கள் அனைத்தையும் முற்றிலும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதியே !


