News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 206
சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே
ஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி – 206
சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே
ஆமாறு அருளிய அருட்பெருஞ்ஜோதி
சாமாறு – இறக்கும் தன்மைகள் / அழிவுகள்;
ஆமாறு – நிலை பெற்று வாழ்ந்திட
மரணத்தை ஏற்படுத்தும் வழிகள், காரணங்கள், வினைகள் (சாமாறு அனைத்தும்) அனைத்தையும் நீக்கி, இந்த உலகிலேயே நான் நித்தியமாக இருக்கும் (அழியாத) நிலையை எனக்கே அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


