News
APRIL 2026
23rd April 2026
தினம் ஒரு அகவல் 210
சாவா நிலையிது தந்தன முனக்கே
ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி – 210
சாவா நிலை இது தந்தனம் உனக்கே
ஆவா என அருள் அருட்பெருஞ்ஜோதி
ஆவா – ஆச்சரியம்
“உனக்கு மரணமே இல்லாத உயர் நிலையை (ஒளி தேகத்தை) அளித்து விட்டோம்” என்று உறுதியளித்து, “ஆச்சரியம்! நீ அதை அடைந்து விட்டாய்!” என்று கூறி அருள் செய்தருளிய அருட்பெருஞ்ஜோதியே!


