News
JANUARY 2026
31st January 2026
தினம் ஒரு அகவல் 23
- தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி
தகர மெய் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
அகர நிலைப்பதி அருட்பெருஞ்ஜோதி !
தகரம் : உள்ளம்
அகரம் : மூலம்
உள்ளத்தின் உள்ள மெய்ஞ்ஞானமயமான தனிப்பெரு வெளியாகிய, மேலும் அனைத்திற்கும் மூலமான அகரம் நிலைபெற்றிருக்கும் இருப்பிடமாகவும் திகழும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !


