News
FEBRUARY 2026
1st February 2026
தினம் ஒரு அகவல் 24
- தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி
தத்துவ அதீத தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !
முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நிற்கும் ஒப்பற்ற மெய்ப் பொருளின் ஞான வெளியாகிய, அந்தத் திருவருள் பொருந்திய அம்பலத்திலும் (ஞான சபையிலும்) விளங்கும் அருள்மயமான பேரொளியே!


