News
FEBRUARY 2026
2nd February 2026
தினம் ஒரு அகவல் 25
- சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சச்சிதானந்தத் தனிப் பரவெளி எனும்
அச்சியல் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !
குற்றம் ஏதுமில்லா ஞானவெளியில் சத் (உண்மை), சித் (ஞானம்), ஆனந்தம் (பேரின்பம்) ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த இறைநிலையான சச்சிதானந்த நிலையில் எங்கும் வியாபித்துள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !


