News
JUNE 2026
8th June 2026
தினம் ஒரு அகவல் 298
எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை
யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி – 298
எல்லாம் வல்ல சித்து எனக்களித்து எனக்கு உனை
அல்லாது இலை எனும் அருட்பெருஞ்ஜோதி !
எல்லாவிதமான வல்லமைகளையும் கொண்ட ஞான ஆற்றலை எனக்கு அளித்து, “இனி உனக்கு நம்மைத் தவிர வேறு துணை இல்லை” என்று உறுதியளித்து அருளிச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!


