தினம் ஒரு அகவல் 310
எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே
அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 310
எச்சோதனைகளும் இயற்றாது எனக்கே
அச்சோ என்று அருள் அருட்பெருஞ்ஜோதி !
எந்தவிதமான கடுமையான சோதனைகளையும், ஆன்மீகப் பரீட்சைகளையும் செய்யாமல், ‘ஆச்சரியமே!’ என்றோ “அய்யோ பாவம்” என்றோ, அருள் வழங்கிய அருட்பெருஞ்ஜோதியே!