News
JUNE 2026
தினம் ஒரு அகவல் 320
இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி
அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி – 320
இருள் அறுத்து என் உளத்து எண்ணியாங்கு அருளி
அருள் அமுதளித்த அருட்பெருஞ்ஜோதி !
அறியாமை எனும் இருளைப் போக்கி, என்னுடைய உள்ளத்தில் நான் நினைத்தபடியே அருள் செய்து, மரணமிலாப் பெருவாழ்வைத் தரும் அருள் என்னும் அமிர்தத்தை எனக்கு அளித்த அருட்பெருஞ்ஜோதியே!


