News
JUNE 2026
தினம் ஒரு அகவல் 328
வெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள்
அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி – 328
வெருள் மனமாயை வினை இருள் நீக்கி உள்
அருள் விளக்கு ஏற்றிய அருட்பெருஞ்ஜோதி !
அச்சம் கொள்ளும் மனதை சூழ்ந்திருந்த மாயை மற்றும் வினைப்பயனால் வந்த அறியாமை இருளை நீக்கி, என்னுடைய உள்ளத்தின் உள்ளே அருளையே வடிவமாகக் கொண்ட ஞான விளக்கை ஏற்றியருளிய அருட்பெருஞ்ஜோதியே!


