News
FEBRUARY 2026
12th February 2026
தினம் ஒரு அகவல் 35
35. இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !
இயற்கையின் உண்மையாக இருக்கின்ற, இயற்கையான இன்பமாகவும் விளங்குகின்ற, என்றும் சோர்வில்லாத அறிவு வடிவமான சிற்சபையிலே வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


