News
JULY 2026
தினம் ஒரு அகவல் 354
புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்
அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி – 354
புவியினுள் புவியாய்ப் புவி நடுப் புவியாய்
அவைதர வயங்கும் அருட்பெருஞ்ஜோதி !
பூமி என்னும் பூதத்தின் உள்ளே அடங்கியிருக்கும் நுட்பமான பூமியின் சக்தியாகவும், அந்தப் பூமியின் மையத்திலும் ஆதாரப் பூமியாகவே நிறைந்து, உயிர்கள் வாழ்வதற்கான உறுதியான நிலையை அருளிப் பிரகாசிக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!


