News
JULY 2026
தினம் ஒரு அகவல் 360
வளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 360
வளி நிலை சத்தியின் வளர்நிலை அளவி
அளியுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி !
அளி – கருணை
காற்றின் நிலைக்கும் அப்பாற்பட்ட சத்தி (ஆற்றல்/சக்தி) என்னும் மூலப்பொருளின் அளவற்ற வளர்ச்சியைத் தனது ஆற்றலால் அளந்து, எல்லாவற்றிலும் கருணை நிலை நிறைந்திருக்கும் வண்ணம் அந்த நிலையை நிலைப்பெறச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!


