News
JULY 2026
17th July 2026
தினம் ஒரு அகவல் 374
மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை
அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி – 374
மண்ணினில் நாற்றம் வகுத்து அது பல்வகை
அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி !
நிலப் பூதத்தின் மணம் (நாற்றம்) என்பதை பல வகைகளாகப் பிரித்து, உலகப் பொருள்களில் அவற்றின் இயல்புக்கேற்பப் பொருந்தும்படிச் செய்த பேரருள் வடிவே அருட்பெருஞ்ஜோதி.


