News
JULY 2026
தினம் ஒரு அகவல் 378
மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 378
மண்ணினில் ஐந்தியல் வகுத்து அதில் பல்பயன்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
நிலப் பூதத்தில் ஐம்புலன்களுக்குரிய ஐவகை இயல்புகளைப் பகுத்து, அந்த இயல்புகளிலிருந்து மனித வாழ்வுக்குத் தேவையான பலதரப்பட்ட நன்மைகளும் பயன்களும் கிடைக்கப்பெறும்படி செய்தருளிய பேரருள் வடிவமே அருட்பெருஞ்ஜோதி.


