News
JULY 2026
தினம் ஒரு அகவல் 386
மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 386
மண் உருச் சத்திகள் மண் கலைச் சத்திகள்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
நிலமாகிய பூதத்தில் பலவிதமான வடிவ ஆற்றல்களையும், அந்த நிலத்தின் அடிப்படைத் தத்துவ ஆற்றல்களையும் (கலைச் சக்திகளையும்) ஒன்றோடொன்று பிணைத்து, உலகை இயக்கச் செய்தருளிய பேரருள் வடிவமே அருட்பெருஞ்ஜோதி.


