News
JULY 2026
தினம் ஒரு அகவல் 400
மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 400
மண் இடைப் பக்குவம் வகுத்து அதில் பயன் பல
அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி !
நிலத்தில் உயிர்கள் வாழ்வதற்கான முதிர்ந்த (பக்குவமான) தன்மையை உண்டாக்கி, அந்தப் பக்குவத்தின் விளைவாக உலகத்தாருக்குப் பலவகையான நன்மைகளும் பயன்களும் கிடைக்கப் பெறும்படி செய்தருளிய பேரருள் வடிவமே அருட்பெருஞ்ஜோதி.


