News
FEBRUARY 2026
தினம் ஒரு அகவல் 42
42. ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்
ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
ஓதி நின்று உணர்ந்து உணர்ந்து உணர்தற்கு அரிதாம்
ஆதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி !
ஞான அறிவுரை நூல்களை தொடர்ந்து படித்து அறிந்தாலும், மீண்டும் மீண்டும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தாலும், அதையும் தாண்டி முழுமையாக உணர்ந்து கொள்வதற்கு அரிதானதாக விளங்கும் எல்லையற்ற தன்மையுடைய அந்த ஆதி சிற்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


