News
FEBRUARY 2026
தினம் ஒரு அகவல் 44
44. இழியாப் பெருநல மெல்லா மளித்தருள்
அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
இழியாப் பெரு நலமெல்லாம் அளித்து அருள்
அழியாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !
ஒருபோதும் குறைந்து போகாத அல்லது அழியாத உயர்ந்த பேரின்ப நலன்கள் அனைத்தையும் அள்ளி வழங்கி அருள் பாலிக்கின்றவரும், காலத்தால் அழியாத ஞானமயமான சிற்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


