News
AUGUST 2026
தினம் ஒரு அகவல் 442
தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி – 442
தீயிடை மூவியல் செறிவித்து அதில்பல
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி
மூவியல் – அக்னி, வெப்பம், சூடு
நெருப்பின் கண் மூன்று இயல்புகளைப் பொருந்தச் செய்து, அந்த இயல்புகளிலிருந்தும் மேலும் பல வகையான நுண்ணிய இயல்புகளையும், பிரிவுகளையும் ஆராய்ந்து அறியும்படி அமைத்தருளிய அருட்பெருஞ்ஜோதியே!


