News
FEBRUARY 2026
26th February 2026
தினம் ஒரு அகவல் 49
49. தம்பர ஞான சிதம்பர மெனுமோர்
அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி
தம் பரஞான சிதம்பரம் எனும் ஓர்
அம்பரத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !
அம்பரம் – பரவெளி
தம்பரம் – தனது மேலான
சிதம்பரம் – சித் + அம்பரம்
தனக்குரிய மேலான ஞானத்தினால் நிரம்பி, சிதம்பரம் என்று போற்றப்படும் ஒப்பற்ற ஞான வெளியில் உயர்ந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


