News
SEPTEMBER 2026
தினம் ஒரு அகவல் 490
காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 490
காற்றினில் காலம் கருதுறு வகைஎலாம்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
கருதுறு – கருதி ஆராயப்படும்
உலக தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு காற்றை வீசும்படிச் செய்து அந்த காற்றின் தன்மையை ஆராய்ந்தே காலத்தை நிர்ணயம் செய்யும் வகையில் அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி !


