News
SEPTEMBER 2026
23rd September 2026
தினம் ஒரு அகவல் 496
வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 496
வெளியிடைப் பூஎலாம் வியப்புறு திறன்எலாம்
அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
ஆகாயம் என்னும் வெளியில் உள்ள அனைத்து அண்டங்களையும், அவற்றின் விந்தைமிகு ஆற்றல்களையும், ஒழுங்குடனும், நிலைபெறும்படியாகவும் அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி !


