News
SEPTEMBER 2026
தினம் ஒரு அகவல் 510
வெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல்
அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 510
வெளியிடை உயிர்இயல் வித்தியல் சித்தியல்
அளிபெற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
ஆகாயம் என்னும் பரவெளியில், உயிர்கள் வாழ்வதற்கான இயல்பு நிலை, அவை தோன்றுவதற்கான வித்து நிலை, மற்றும் உயிர்களின் முடிவாகிய இறுதி நிலை ஆகிய மூன்றையும், இயற்கையின் விதிப்படி கருணையுடன் முறையாக அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே! சித்தாந்த தத்துவத்தின் படி பஞ்சபூதங்களின் இயக்கமே, உயிர் இயக்கத்திற்கும், யோக இயக்கத்திற்கும் (வித்தியல்), சித்தி நிலை (சித்தியல்) பெறுவதற்கும் அடிப்படையாக இருக்கின்றது. சித்தியின் முடிவு நிலை துரியாதீதம் என்ற பரவெளி நிலையாகும்.


