News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 52
52. நாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே
ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி
நாடகத் திருச் செயல் நவிற்றிடும் ஒரு பேர்
ஆடக பொது ஒளிர் அருட்பெருஞ்ஜோதி !
நவிற்றல் – நடத்துவது. ஆடகம் – பொன்
உலகத்தின் படைப்பு, காப்பு, அழிவு போன்ற திருவிளையாடல்கள் எனும் நாடகத்தை நடத்திக் காட்டுகின்றவரே! ஒப்பற்றவரே! பொன்னால் ஆன பொதுச் சபையில் (சிற்சபையில்) ஒளிவீசுகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


