News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 538
புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 538
புறப்புறக் கடைமுதல் புணர்ப்பால் புறப்புற
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
கணம் – கூட்டம் / தொகுதி புணர்ப்பு – பொருந்துதல் / இணைத்தல்
வெளி உலகுக்கும் அப்பாற்பட்ட வெளியின் எல்லையிலிருந்து ஆரம்பம் வரை உள்ள அனைத்தையும் இணைத்து, அந்த எல்லையற்ற வெளியிலும் கூட அறத்தின் இயக்க விதிகளை அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி!


