News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 552
புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 552
புனல்மேல் புவியும் புவிமேல் புடைப்பும்
அனல்மேல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரின் மேலே நிலமும், நிலத்தின் மேலே மலைகள் போன்ற புடைப்புகள் இருப்பதும், இவை அனைத்தையும் அனல் என்னும் மூல ஆற்றலின் மீது அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி ! இந்த கவி வடவாக்கினி இயக்கத்தைக் குறிக்கிறது.


