News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 560
கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த
அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 560
கலைவெளி அதனைக் கலப்பறு சுத்த
அலர்வெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி
கலைவெளி – அறிவு சார்ந்த வெளி
அலர்வெளி – ஞானம் சார்ந்த வெளி
மனித அறிவுக்கு எட்டாத பல கலைகளையும் தத்துவங்களையும் கடந்து, அவை அனைத்தையும் ஒரு தெளிவான, தூய்மையான பெருவெளியாகப் புரிய வைத்த அருட்பெருஞ்ஜோதி.


