News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 57
57. பிறிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்
னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி
பிறிவுற்று அறியாப் பெரும் பொருளாய் என்
அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ்ஜோதி !
எந்தக் காலத்திலும் பிரிந்து போவதையோ அல்லது விலகி இருப்பதையோ அறியாத மகத்தான பரம்பொருளாக விளங்குகின்றவரும், எனது அறிவினுள் இருந்து சுத்த அறிவைச் செலுத்துகின்ற அறிவாகவே இருக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!


