News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 572
மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 574
மனமுதல் கருவிகள் மன்உயிர் வெளியிடை
அனமுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அனம் – அழகு மன்னுயிர் – நிலைப்பெற்றுள்ள உயிர்
மனம் உள்ளிட்ட அகக்கருவிகள் அனைத்தும், நிலைபெற்றுள்ள உயிரின் உணர்வு வெளியில் மிக அழகாகவும், முறையான தன்மையுடனும் பொருந்திச் செயல்படும் வண்ணம் அந்த அமைப்பை வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


