News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 582
ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 582
ஓங்கிய அண்டம் ஒளிபெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
உயர்ந்து நிற்கும் இந்தப் பிரம்மாண்டமான அண்டங்கள் எல்லாம் ஒளி பெற்று இயங்கும் பொருட்டு, அவற்றுக்கு உள்ளே சூரியன், சந்திரன், அக்னி எனப்படும் மூன்று சுடர்களையும் முறைப்படி அமைத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி ! உடலில் இந்த முச்சுடர்களின் முறையான இயக்கமே ஆன்மாவை சித்திப் பெற செய்கிறது.


