News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 590
மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை
அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 590
மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை
அறத்தொடு வகுத்த அருட்பெருஞ்ஜோதி
மறைத்தல் – இது ஒரு தெய்வீக ரகசியம் என்று கூறலாம். ஆன்மா பக்குவ நிலையை அடையும் வரை அதற்கு இறைவனை அடையக்கூடிய நிலையை மறைத்து வைப்பதே அறமாகிறது. ஐந்தொழிலில் இது ஆன்மாக்களுக்கு செய்யக்கூடிய மிகப் பெரும் கருணையாகும்.
உயிர்களின் வினைகள் பக்குவம் அடையும் வரை உண்மையை மறைத்து வைக்கும் தொழிலைச் செய்யும் தலைவர்களையும், அவர்களுக்குரிய அண்டங்களையும், தர்மத்தின் நெறிப்படி (அறத்தொடு) வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி!


