News
NOVEMBER 2026
14th November 2026
தினம் ஒரு அகவல் 598
சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 598
சத்தத் தலைவரைச் சாற்றும் அண்டங்களை
அத்தகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
உண்மைப் பொருளை அறிந்து ஓங்காரத்தைப் பெற்ற தலைவர்களையும், அவர்களால் ஆளப்படும் சிறப்பான அண்டங்களையும், அந்தந்தத் தகுதிக்கேற்ப நேர்த்தியாக வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


