News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 602
பகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களை
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 602
பகர் பராசத்தியைப் பதியும் அண்டங்களை
அகமற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
எல்லோராலும் புகழப்படும் மேலான பராசக்தியையும், அந்தச் சக்தி நிலைப்பெற்றுள்ள அண்டங்களையும், அந்த அண்டங்களுக்குள் அந்தச் சக்தி எவ்வித வேறுபாடும் இன்றிப் பிரிக்க முடியாதபடி ஒன்றாகக் கலந்து இருக்குமாறு வகுத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


