News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 61
61. பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே
அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி
பொது உணர்வு உணரும் போது அல்லால் பிரித்தே
அது எனின் தோன்றா அருட்பெருஞ்ஜோதி !
பொதுவான உணர்வான “எல்லா உயிரும் ஒன்றே” என்று உணராமல், இறைவன் வேறு, உயிர்கள் வேறு என்று பிரித்துப் பார்க்க முயல்பவர்களுக்கு இறை அனுபவத்தை கொடுக்காமல் இருக்கும் அருட்பெருஞ்ஜோதியே !


